Saturday, June 18, 2011

விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா! ( Suriya becomes No.1 of Kollywood )


விஜய் ரசிகர்களை மேலும் ஆத்திரமூட்டுவது போல ஒரு செய்தி. இருந்தாலும் என்ன செய்வது? யதார்த்தம் அதுதானே? விஜய்யை முந்திவிட்டார் சூர்யா. இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை பரவ விட்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் மீடியேட்டர்களும். இதை நிரூபிக்கும் விதத்தில் அவர்கள் தரும் விளக்கங்கள் எதையும் அலட்சியமாக கருத முடியாது. 'மாற்றான்' படத்திற்கு சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் பதினாறு கோடியாம். அதுவே 'வேலாயுதம்' படத்திற்கு விஜய் வாங்கியிருக்கும் சம்பளம் பதிமூணு கோடியாம். ஒரு நடிகருக்கு அவரது பிசினசை வைத்துதான் சம்பளத்தை ஏற்றுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படியென்றால் சூர்யாவின் சம்பளம் ஏறியதற்கும் இதுதான் காரணமா என்றால் அழுத்தம் திருத்தமாக ஒரு ஆமாம் வருகிறது அவர்களிடமிருந்து. 'மாற்றான்' படம் இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் இப்படத்தின் வியாபார எல்லைகள் விரிய ஆரம்பித்திருக்கிறதாம். விலையும் உச்சத்தில் நிற்கிறதாம். கிட்டத்தட்ட 63 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசுகிறார்களாம் விநியோகஸ்தர்கள். இதில் கணிசமான கோடிகளை குறைத்துதான் வியாபாரம் ஆகியிருக்கிறதாம் விஜய்யின் தற்போதைய படம் ஒன்று. இப்போது சொல்லுங்க யார் உசத்தி என்கிறார்கள் மேற்படி மீடியேட்டர்கள். ரேஸ்ல நல்லா ஓடுற குதிர மொதல்ல வர்றது தப்பில்லையே....!

No comments:

Post a Comment