Tuesday, June 14, 2011

சூர்யா பாடும் சைனீஸ் பாடல்



சூர்யா பாடும் சைனீஸ் பாடல்

ஏழாம் அறிவு படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கிறார் என்பதும் அதில் ஒரு கதாபத்திரம் சர்கஸ் கலைஞர் என்பதும் தெரிந்ததே. இதற்காக சூர்யா பல பயிற்சிகள் மேற்க்கொண்டு வந்தார். இப்போது அவர் நடிக்கும் இன்னொரு கதாபாத்திரம் புத்த மதத்தை சேர்ந்த சாமியாராகவும் மற்றொரு கதாபாத்திரம் விஞ்ஞானி எனவும் தெரிகிறது.



குங்ஃபூ கலையை ஆராய்ந்து பார்க்கிறது கதைக்களம் எனவும் அது பற்றி சில ரகசியங்கள் படத்தில் இருப்பதாகவும், இந்தியா சீனாவுக்கான ஆரம்பகால உறவுகளைப் பற்றியும் படத்தில் சொல்லப் படுவதாக செய்தி.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் படத்தில் ஒரு சைனீஸ் பாடல் இருக்கிறதாம். இதை 'ஹௌ' என்னும் சீன பாடகர் பாடியிருக்கிறார். அவரை சில தமிழ் வரிகளையும் பாடவைத்திருகிறார் ஹாரிஸ். அனைத்து பாடல்களும் முடிந்துள்ள நிலையில் விரைவில் இசை வெளியீட்டு விழா இருக்கும் என தெரிகிறது

No comments:

Post a Comment