Friday, February 4, 2011

surya attens his fan marraige 2 his request in anandha vikatan........



'ஹாய் விகடன்... நான் தரணி. வர்ற ஜனவரி 26-ம் தேதி எனக்கும் ஸ்ரீனிவாஸுக்கும் கல்யாணம். எனக்கு சிவகுமார் சார் குடும்பத்தை ரொம்பப் பிடிக்கும். ஒழுக்கம், உதவுற குணம், குழந் தைக வளர்ப்புன்னு ஒரு ரோல் மாடல் ஃபேமிலி. அவங்க குடும்பத்தில் இருந்து என் கல்யாணத்துக்கு யாராவது வந்து வாழ்த்தினா, நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். சூர்யா வந்தார்னா... ரொம்ப ரொம்ப சந்தோஷம்!’ - தரணி அனுப்பிய இ-மெயிலின் சுருக்கம் இது!

தரணியின் 'ஆசை’யை நிறைவேற்றும் முயற்சி தொடங்கியது. நான் விசாரித்த சமயம் சூர்யா வெளிநாட்டில் இருந்தார். ''26-ம் தேதி சென்னை வந்துடுவேன்னுதான் நினைக்கிறேன். ஆனா, தரணிகிட்ட இப்ப எதுவும் சொல்லிடாதீங்க. அன்னிக்கு நான் சென்னையில் இருந் தேன்னா, நிச்சயம் தரணி கல்யாணத்துக்குப் போவோம்!'' என்றார்.ஆனால், ஜனவரி 25-ம் தேதி மாலை வரை சூர்யா செம பிஸி. ''ஸாரி தரணி!'' சொல்லி, கல்யாணப் பெண்ணை வருத்தப்படவைக் கவும் மனம் இல்லை. தாங்க் காட், மறுநாள்... ஜனவரி 26. அதிகாலையில் சூர்யாவிடம் இருந்து அழைப்பு. ''இப்போதான் ஏர் போர்ட்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். டிரான்சிட்ல இருந்ததால், தகவல் அனுப்ப முடியலை. தரணி கல்யாணத்துக்கு நான் ரெடி!'' - பயணக் களைப்பையும் மீறிய உற்சாகம் சூர்யா குரலில்.


உடனடியாக சூர்யாவை அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு விரைந்தோம். சூர்யாவை எதிர்பார்க்காத ஆச்சர்ய அதிர்ச்சி அலைகள் மண்டபம் முழுமைக்கும் பரவ... ஹோவென உற்சாகக் கூச்சல். அப்போதுதான் முகூர்த்தம் முடிந்து இருக்க, நலங்கு வைப வம் ஆரம்பித்து இருந்தது!

ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அலையடிக்க, சூர்யாவை வரவேற்றார்கள் தரணி - ஸ்ரீனிவாஸ் ஜோடி. தரணியின் பெற்றோர் சாந்தி - சங்கர், ஸ்ரீனிவாஸின் பெற்றோர் ரமணி - சரஸ்வதி எல்லோருக்கும் பெருமிதப் பூரிப்பு. அறிமுக நல விசாரணைகள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் முடியும் வரை தரணி முகத்தில் நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி.

திடீர் என்று ஒரு பாட்டி, ''உன் நடிப்பு அருமையா இருக்குப்பா. உன் நல்ல மனசுக்கு இன்னும் பெரிய ஆளா வருவேப்பா!'' என்று வாழ்த்திவிட்டு சூர்யா கன்னத்தில் கிஸ் அடிக்க, ஹீரோ முகத்தில் குபீர் வெட்கம்!

நலங்கு வைபவத்தில் கலந்துகொண்டார் சூர்யா. ''ஏன், ஜோதிகா மேடத்தைக் கூட்டிட்டு வரலை?'' என்று உரிமையோடு கேட்டார் தரணி. ''அவங்க மும்பையில் இருக்காங்க. இங்கே இருந்திருந்தா, நிச்சயம் அழைச்சுட்டு வந்திருப்பேன்!''

''தியா, தேவ் எல்லாம் எப்படி இருக்காங்க?'' இது மணப் பெண் தோழியின் கேள்வி.

''செம சேட்டை. ஜோ நேத்துதான் போன்ல அரை மணி நேரம் புகார் பட்டியல் வாசிச்சாங்க. 'என்னால சமாளிக்க முடியலை. சீக்கிரம் வந்து கூட்டிட்டுப் போங்க’ன்னு மேடம் ஆர்டர் போட்டுருக்காங்க. இங்கே இருந்து நேரே மும்பை ஃப்ளைட் ஏறுறேன்!'' '' 'ஏழாம் அறிவு’ கதை என்ன?'' கும்பலில் இருந்து ஒருவர் கேட்க, ''என்னங்க விகடன் டீம் மாதிரி கேள்வி கேட்குறீங்க. இப்போ எதுவும் சொல்ல முடியாது. படம் பாருங்க... ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும்!'' என்று சமாளித் தார் சூர்யா.

''கார்த்திதான் உங்களுக்குப் போட்டிபோலத் தெரியுதே... அடி பின்றாரே?'' என்று நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கேட்க, சூர்யா முகத்தில் உற்சாகம். ''கார்த்தி எப்படிப் பேர் எடுக்கணும்னு ஆசைப்பட்டேனோ, அதே மாதிரி பேர் எடுத் துட்டு இருக்கான். ஆனா, எங்களுக்கு நடுவுல எப்பவும் போட்டி கிடையாது!'' என்று சிரித்தார் சூர்யா.

''நான் பேசுனது போதும். ஃபங்ஷன் எனக்காக நின்னுட்டு இருக்கு'' என்றபடியே குளிர் பானத்தை எடுத்து மணப் பெண்ணுக்குக் கொடுத்தார். அதைப்போலவே மாப்பிள்ளைக்கும் கொடுத்தார். ஒரு தடவை குடித்துவிட்டு, தரணிக்குக் கொடுத்தார் ஸ்ரீனிவாஸ். அதே மாதிரி தரணியும் ஒரு சிப் குடித்துவிட்டு, ஸ்ரீனிவாஸுக்குக் கொடுத்தார். ''அய்ய்ய்... தரணி குடிக்கவே இல்லை. ஸ்ரீனிவாஸ் சார் அவங்க உங்களைச் செமையா ஏமாத்துறாங்க'' என்று சூர்யா போட்டுக் கொடுக்க, அடக்க முடியாமல் சிரித்தார்கள் அனைவரும்.

''விட்டுக்கொடுத்துப் போனீங்கன்னா, வீடு நல்லா இருக்கும். ரெண்டு பேருமே சின்னச் சின்னதா சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ் அப்பப்போ கொடுங்க. லைஃப் சுவாரஸ்ய மாப்போகும்'' என்று சந்தோஷ டிப்ஸ் கொடுத்தார் சூர்யா.
திருமண போட்டோகிராஃபரிடம் இருந்து கேமராவை வாங்கி, படம் எடுக்க ஆரம்பித்தார் சூர்யா. தரணியும் ஸ்ரீனிவாஸும் ஒட்டிக்கொண்டு நிற்க, ''பரவாயில்லையே, இப்பவே அட்டாச்டா இருக்கீங்களே... ரொம்ப நல்ல விஷயம். 100 வருஷம் ஆனாலும் இப்படியே சேர்ந்து இருக்கணும்'' என்று சிரித்தார். ''இது சூர்யாவோட கிஃப்ட்'' என்றபடியே அழகான பட்டுப் புடவை ஒன்றை தரணிக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு சூர்யா கிளம்ப, சந்தோஷமாக வழியனுப்பிவைத்தார்கள் மணமக்கள்.

''நான் விகடனுக்கு மெயில் அனுப்பும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கிண்டல் அடிச்சாங்க. ஆனா, இது நடக்கும்னு நம்பலை. என் கனவை நிஜமாக்கி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸுங்க!'' என்று தரணி நெகிழ, அவரோடு சேர்ந்து சிரித்தார் ஸ்ரீனிவாஸ்.

மண்டபத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் சூர்யாவிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்... ''நல்ல ஜோடி. என் ரசிகையின் திருமணத்தில் கலந்துகொண்டது சந்தோஷமாக இருக்கிறது. விகடனுக்கு நன்றி

No comments:

Post a Comment