Friday, August 27, 2010

சிவகுமார், சூர்யா ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்




சென்னை, ஆக. 27-

நடிகர் சிவகுமாரும் சூர்யா ரசிகர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அரங்கில் நடந்தது. ஆஸ்பத் திரி டாக்டர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகுமார் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். இறந்த பிறகும் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

சிவகுமாரை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சூர்யா ரசிகர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். தமிழ்நாடு மாநில சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் எம்.எம்.ஆர். மதன் தலைமையில் ரசிகர்கள் 65 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்தார்கள். உறுப்புதான பத்திரங்களை சிவகுமார் மூலமாக டாக்டர் களிடம் வழங்கினார்கள்.

உடல் உறுப்புதான வார விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிகள் நடந்தன. சுகாதாரத்துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ், டீன் மோகன சுந்தரம், டாக்டர் வேணி மோகன் பவுண்டேஷன் தலைவர் செரீப் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment