Friday, August 27, 2010

நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டனர்.


நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டனர்.

திருவான்மியூர் முத்து லட்சுமி மகப்பேறு மருத்துவ மனையில் இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சூர்யா பிறந்த நாளை யொட்டி ரசிகர்கள் 70 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்தார்கள். 90 பேர் ரத்த தானம் செய்தனர்.

அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பரமேஸ்வரன் செயலாளர் இரா.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூர்யா நற்பணி இயக்க மாநில அமைப்பாளர் எம்.எம்.ஆர். மதன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment